கோதுமை மாவை ஏற்றிவந்த லொறி விபத்து! சாரதியின் தூக்க கலக்கமே காரணம்
4 view
கோதுமை மாவை ஏற்றிவந்த லொரி ஒன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் வைத்தே இந்த விபத்துச் சம்பவம் இன்று 03 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி கோதுமை மாவை ஏற்றிச் செல்லும் போது சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இவ்வாறு விபத்துக்குள்ளான லொறியில் பயணம் செய்த சாரதியும் நடத்துனரும் காயங்களின்றி தப்பியுள்ளனர். மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பிற செய்திகள்
The post கோதுமை மாவை ஏற்றிவந்த லொறி விபத்து! சாரதியின் தூக்க கலக்கமே காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோதுமை மாவை ஏற்றிவந்த லொறி விபத்து! சாரதியின் தூக்க கலக்கமே காரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
