நாட்டுக்கு தேவையற்ற அரச ஊழியர்களை ஆட்குறைக்குமாறு ஆலோசனை
4 view
சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவில்லாத இழுபறி நிலையிலேயே தொடர்வதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கலந்துரையாடலொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், அதிகளவிலான ஊழியர்களைக் கொண்ட அரச சேவை நாட்டுக்கு தேவையற்ற சுமையாக மாறியுள்ளது. இது தொடர்பாக எதிர்காலத்திலும் அரசாங்கம் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும், ஆட்குறைப்பு செய்ய வேண்டும். இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முடிந்தவரை சிறியதாக இருக்க வேண்டும். தேவையற்ற சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வளர்ந்த நாடுகளைப் போல் தொழில் முனைவோருக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும். அத்துடன் நம்மிடம் உள்ள நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக சில வெளிநாட்டுக் கடனை பெறுவது என்பது அனைவருக்கும் தெரியும். IMF பேச்சுவார்த்தையில் இருந்து அரசாங்கம் அதையே எதிர்பார்க்கிறது. ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நீண்ட கால வேலை திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கும் வரை யாரும் எங்களுக்கு…
The post நாட்டுக்கு தேவையற்ற அரச ஊழியர்களை ஆட்குறைக்குமாறு ஆலோசனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டுக்கு தேவையற்ற அரச ஊழியர்களை ஆட்குறைக்குமாறு ஆலோசனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
