எண்ணெய் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் தீர்வு காணப்படும் என நம்பவில்லை-ரதன தேரர்!
5 view
எண்ணெய் நெருக்கடி என்பது ஒரு கோரிக்கை மாத்திரமே என எமது ஜன பல கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். தேசிய பேரவையை விரைவில் நியமித்து நாட்டின் பிரச்சினைகளில் பரந்துபட்ட ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ஆட்சியாளர்கள் தலையிட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுடன் சாக வேண்டும் அல்லது வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். ராஜகிரிய சந்தஹம் செவன நிறுவனத்தில் இன்று (1) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரதன தேரர் இதனைத் தெரிவித்தார். எண்ணெய் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் தீர்வு காணப்படும் என நம்பவில்லை எனவும், இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த நெருக்கடி நிலை அரசாங்கத்திற்கு தெரியும் என தெரிவித்த ரதன தேரர், இதனை அறிந்த இவர்கள் ஏன் மூன்று மாதங்களாக திட்டம் தீட்டவில்லை என்பது புரியாத…
The post எண்ணெய் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் தீர்வு காணப்படும் என நம்பவில்லை-ரதன தேரர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எண்ணெய் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் தீர்வு காணப்படும் என நம்பவில்லை-ரதன தேரர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
