ஐ.நா. பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி, தமிழர்களுக்கு அநீதியா? நா. தமிழீழ அரசாங்கம் கேள்வி

5 view
உக்ரைன் போர் தொடர்பில், ரஸ்யாவுக்கு எதிரான பல தீர்மானங்களை ஐ.நா. பாதுகாப்பு சபையில் அது நிறைவேற்றாது எனத் தெரிந்தும் அதனைக் கொண்டுவரக் காரணம் உக்ரைன் விடயத்தினை சர்வதேச தளத்தில் வெளிப்படுத்துவதே ஆகும். அதுபோலவே, தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை விவகாரத்தினை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டுவர போதுமான காரணங்கள் காணப்படுகின்றன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொறுப்புக்கூறலுக்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு கிட்டாது என பிரித்தானியாவின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற துணைச் செயலாளர் விக்கி வோட் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்திருந்தார். பிரித்தானியா உட்பட ஐந்து கூட்டு நாடுகளே ஐ.நா. மனித உரிமைச்சபையில் இலங்கை தொடர்பிலான 46/1 தீர்மானத்தினை முன்னெடுத்திருந்த நிலையில், பிரித்தானிய அரசாங்கத்தின் இக்கருத்து தமிழர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,…
The post ஐ.நா. பாதுகாப்பு சபை விடயத்தில் உக்ரைனுக்கு நீதி, தமிழர்களுக்கு அநீதியா? நா. தமிழீழ அரசாங்கம் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース