கோடை காலம் கோழிகளுக்கு சாபம்
6 view
கோடைகாலத்தில் ஏற்படும் அதிகரித்த வெப்பம் காரணமாக கோழிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. கோழிகளுக்கு உகந்த உச்ச பட்ச சூழல் வெப்பநிலையாக 3௦-32 செல்சியஸ் அளவிலேயே காணப்பட வேண்டிய போதும் இலங்கை போன்ற நாடுகளில் வருடம் முழுவதும் அதனை விட அதிகரித்த வெப்பநிலை காணப்படுவது அண்மைக் காலத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமுறுதலின் தாக்கமாக இதனைக் கருத முடியும். எனவே கோடை காலம் மட்டுமின்றி வருடம் முழுவதும் கோழிகளை வெப்ப அயர்ச்சியில் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை கோழிப் பண்ணை யாளர்களுக்கு ஏற்படுகிறது. சராசரியை விட சூழல் வெப்பநிலை அதிகரிக்கும் போது கோழிகள் அசெளகரியத்தை சந்திக்கின்றதோடு அதிகளவில் இறக்கவும் செய்கின்றன. அதிகரித்த வெப்பநிலை காரணமாக கோழிகளில் உடல் எடை குறைதல், இறைச்சியின் தரம் குறைதல், முட்டையின் தரம் குறைதல், முட்டை உற்பத்தி குறைதல், இனப்பெருக்க ஆற்றல் குறைதல் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. கோழிகளுக்கு எமக்கு இருப்பது போல் வியர்வைச் சுரப்பி கிடையாது. எனவே தமது…
The post கோடை காலம் கோழிகளுக்கு சாபம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோடை காலம் கோழிகளுக்கு சாபம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
