கல்முனை டியூட்டரிகளில் வகுப்புகள் நடைபெறும் தினங்களை மட்டுப்படுத்த தீர்மானம்: வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறை
15 view
(அஸ்லம் எஸ்.மௌலானா) பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து செலவு என்பவற்றைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களில் (டியூட்டரி) ஜீ.சி.ஈ.உயர்தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள் நடத்தப்படுகின்ற நாட்களின் எண்ணிக்கையை 03 தினங்களாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கல்முனை மாநகர சபையில் நேற்று மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற டியூட்டரி நிர்வாகிகளுடனான கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதில் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கான தட்டுப்பாடு, முச்சக்கர வண்டிகளுக்கான அதிகரித்த கட்டணம், தனிப்பட்ட வாகனங்களாயினும் எரிபொருள் கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களினால் குறிப்பிட்ட சில காலத்திற்கு டியூட்டரிகளை மூடி, வகுப்புகளை இடைநிறுத்த வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. நாட்டு நிலைமை விரைவில் சீராகி விடும் என்ற நிச்சயம் இல்லாத…
The post கல்முனை டியூட்டரிகளில் வகுப்புகள் நடைபெறும் தினங்களை மட்டுப்படுத்த தீர்மானம்: வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனை டியூட்டரிகளில் வகுப்புகள் நடைபெறும் தினங்களை மட்டுப்படுத்த தீர்மானம்: வெள்ளிக்கிழமை கட்டாய விடுமுறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
