கும்பாபிஷேகம் காணும் யாழ்.பல்கலை பரமேஸ்வரர் ஆலயம்!
11 view
யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. எண்ணெய்க்காப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இதய சுத்தியுடன் அடியவர்கள் வருகை தந்து எம்பெருமான் அருளைப் பெற்றுக்கொள்க என பரமேஸ்வரா கல்லூரி இயக்குனர் சபை, கும்பாபிஷேக திருப்பணிச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் எதிர்வரும் முதலாம் திகதி முதல், அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் லக்சுமி ஹோமம் இடம்பெறும். கும்பாவிசேக நாளான 6 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு யாக பூஜைகளுடன், அபிஷேகம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற செய்திகள்
The post கும்பாபிஷேகம் காணும் யாழ்.பல்கலை பரமேஸ்வரர் ஆலயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கும்பாபிஷேகம் காணும் யாழ்.பல்கலை பரமேஸ்வரர் ஆலயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
