வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பிதம்! – விக்கி எம்.பி கவலை
15 view
வடகிழக்கு தமிழ் மக்களின் இன்றைய நிலைமை அப்படியே ஸ்தம்பித்து நிற்பது தான் என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 30 வயது நிறைந்த ஒரு பெண் எமது நல்லூர் வாசஸ்தல எல்லைக்கு அண்மியதாகத் தெருவில் மயங்கி விழுந்து கிடந்தார். ஒரு வயதான அம்மா அவரை பார்த்துவிட்டு பதைபதைத்து பாதுகாப்பு பொலிஸ் அலுவலரிடம் முறையிட்டார். அந்த அம்மையாரும் சுற்று வட்டாரத்தில் இருந்தவர்களும் விழுந்து கிடந்தவருக்கு மூர்ச்சை தெளிவித்து தண்ணீரும் சாப்பிட உணவும் வாங்கிக் கொடுத்தார்கள். அவரை எமது இல்லத்திற்கு அழைத்து வந்து விசாரித்தோம். திருமணமானவர், கணவருக்கு ஒரு கண் தெரியாது, வேலையில்லை, ஒன்றரை வயதில் ஒரு மகன், இவர் வேலை தேடி அலைந்துள்ளார், அன்று சாப்பிடவில்லை, மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு போதிய உதவிகள் செய்து நாம் அனுப்பிவிட்டோம். அந்த வயதான அம்மா…
The post வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பிதம்! – விக்கி எம்.பி கவலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பிதம்! – விக்கி எம்.பி கவலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
