பெட்ரோலிய வளங்களை விற்க விடமாட்டோம்! சஜித்
15 view
நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில், அந்நெருக்கடியை பொருட்டாக வைத்து, நாட்டின் பெறுமதியான வளங்களில் ஒன்றான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ராஜபக்ஸ குடும்பத்தினர் தலைமையிலான இந்த அரசின் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (28) தெரிவித்தார். தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பொன்று நேற்று (28) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், இதில் சம்பந்தப்படும் சகல அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியினால் அமையப்பெறும் அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய முழுமையான செயல்பாட்டின் ஊடாக 100% மண்ணெண்ணெய் தேவையையும்,சுமார் 50% விமானங்களுக்கான எரிபொருள் தேவையையும், 100% நெக்டா தேவையையும், 30% டீசல், 14% பெட்ரோல், 8% எரிவாயு, மின் உற்பத்திக்குத் தேவையான பதப்படுத்தல் எரிபொருள்…
The post பெட்ரோலிய வளங்களை விற்க விடமாட்டோம்! சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெட்ரோலிய வளங்களை விற்க விடமாட்டோம்! சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
