சிறுவர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்த தீர்மானம்

4 view
சிறுவர்கள் மற்றும் இளையவர் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கும், சிறுவர் பாதுகாப்பு மற்றும் நீதி தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளையும் சிறுவர் எனப் பொருள்கோடல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சமவாயத்திற்கு இணங்கி அதன் ஏற்பாடுகளை உட்சேர்த்து சிறுவர்கள் மற்றும் இளையவர் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை, பாதுகாப்பு மற்றும் காப்பீடுகள் தேவையான பிள்ளைகள் தொடர்பாக வழக்கு விசாரணைகளுக்கோ அல்லது சட்டத்தை…
The post சிறுவர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்த தீர்மானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース