அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!
9 view
அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நேட்டோவின் அணு அயுத விமானங்கள் பெலாரஸ் எல்லைக்கு நெருக்கமாக வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி முறையிட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோவை மெஸ்கோவில் கடந்த சனிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். லித்துவேனியா, போலந்து ஆகிய அண்டை நாடுகள் தனக்கு எதிராக மோதல் அணுகுமுறையைப் பின்பற்றுவதாக லுகசென்கோ தெரிவித்திருந்தார். இந்தநிலையிலேயே அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக புட்டின் தெரிவித்துள்ளார்.
The post அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
