வண்ணாத்தவில்லு வெடிபொருட்கள் களஞ்சியசாலை விவகாரம்; நால்வருக்கு பிணை
12 view
புத்தளம் – வண்ணாத்திவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த புத்தளத்தை சேர்ந்த நால்வருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் ட்ரயல் அட்பார் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் சந்தேக நபர்கள் நால்வருக்கும் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் வண்ணாத்திவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு சந்தேக நபர்களுள் முதலாம், இரண்டாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேக நபர்களுக்கே இன்றைய தினம் புத்தளம் மேல்நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டன. மேற்படி சந்தேக நபர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மற்றும் முஹம்மது சஜாத், நதீஹா அப்பாஸ் , முஹம்மது அத்னான், முஹம்மது அல்தாப் ஆகியோர் பிணை கோரும் பிணை விண்ணப்பத்தினை சமர்பித்திருந்தனர். இதனை பரிசீலனை செய்வதற்கான காலத்தை…
The post வண்ணாத்தவில்லு வெடிபொருட்கள் களஞ்சியசாலை விவகாரம்; நால்வருக்கு பிணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வண்ணாத்தவில்லு வெடிபொருட்கள் களஞ்சியசாலை விவகாரம்; நால்வருக்கு பிணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
