மீண்டும் பொதுமுடக்கம் நோக்கிச் செல்கிறதா இலங்கை!
13 view
இந்துசமுத்திரத்தின் முத்து என பல்வேறு நாடுகளால் சிறப்பிக்கப்பட்ட இலங்கை இன்று கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் அரசுக்கு எதிரான கோசங்கள் ஒலிக்கத் தொடங்கியது. அதேவேளை எரிபொருள் எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்களும் ஒன்றுதிரண்டு பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஒன்றுகூடிய சமயத்தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் இணைந்து கடந்த சித்திரை மாதம்09ம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். இவ்வாறாக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்களும் தனிநபர்களும் பல்வேறு உதவிகளை…
The post மீண்டும் பொதுமுடக்கம் நோக்கிச் செல்கிறதா இலங்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் பொதுமுடக்கம் நோக்கிச் செல்கிறதா இலங்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
