இரண்டு பெண்கள் திருமணம் செய்ய விரும்பிய வழக்கு: இந்திய பெண் விடுதலை
13 view
அக்கரைப்பற்று,ஜுன் 27 அக்கரைப்பற்றில் திருமணம் செய்து கொள்ள முயன்ற இரண்டு பெண்களும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதில் இந்தியப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக பெண்கள் அமைப்பொன்று பொறுப்பேற்றது. அக்கரைப்பற்றை சேர்ந்த பெண், சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று புறநகர் பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் தாயொருவரும், இந்தியாவை சேர்ந்த இளம் பெண்ணொருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அதை தடுத்து நிறுத்தும் படியும் அக்கரைப்பற்று பெண்ணின் தந்தை அண்மையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.ஸ இதையடுத்து, 19 வயதான அக்கரைப்பற்று பெண்ணும், அவரது வீட்டில் தங்கியிருந்த 24 வயதான இந்தியப் பெண்ணும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை கல்முனை வைத்தியசாலையில் அனுமதித்து, மனநல பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார். அக்கரைப்பற்று பெண் திருமணமானவர். அவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.அவரும், தமிழகத்தின் விழுப்புரம், குன்னுத்தூரை சேர்ந்த கலைப்பட்டதாரியான…
The post இரண்டு பெண்கள் திருமணம் செய்ய விரும்பிய வழக்கு: இந்திய பெண் விடுதலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டு பெண்கள் திருமணம் செய்ய விரும்பிய வழக்கு: இந்திய பெண் விடுதலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
