மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட முஷாரப் எம்பி
5 view
கொழும்பு,ஜுன் 27 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். எம். முஷாரப் தன்னை அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து நீக்கியமை இயற்கை நீதிக்கு முரணானது என்ற அடிப்படையில் அக்கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக இன்று (27) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடாத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் கட்சியின் யாப்புக்கு எதிராகவும் அதன் தீர்மானங்களுக்கு எதிராகவும் பாராளுமன்ற உறுப்பினர் செயற்பட்டார் என்று தெரிவித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். மக்கள் காங்கிரஸ் கட்சியானது குறித்த பாராளுமன்ற உறுப்பினரினை கட்சியிலிருந்து நீக்கியமை தொடர்பாக இம் மாதம் முதலாம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த நீக்கம் பற்றி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்த திகதியிலிருந்து ஒருமாத காலத்தினுள் அந்நீக்கத்திற்கு எதிராக உச்ச…
The post மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட முஷாரப் எம்பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட முஷாரப் எம்பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
