பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!
13 view
பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள் என்று கிராமங்களில் ஒரு பழமொழியை சொல்லுவார்கள். அது இப்போது நாட்டுக்கு நல்லாவே பொருந்துகிறது. தற்சமயம் கையிருப்பில் 9,000 MT டீசலும் 6,000 MT பெற்றோலுமே இருக்கிறது. இது நாட்டின் ஒருநாளுக்குரிய நுகர்விற்கு போதுமான அளவாகும். அமைச்சரவையின் கருத்துப்படி யூலை 03 அல்லது 04ம் திகதியே எரிபொருள் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால் அதுவும் நிச்சயமற்றது. ஆக ஒரு நாளிற்குரிய எரிபொருளின் அளவோடு சுமார் இரண்டு கிழமைகள் சமாளிக்க வேண்டிய தேவை உள்ளது. இவற்றைப்பற்றி கதைத்தும் எழுதியும் ஆகப்போவது எதுவும் இல்லைத்தான் ஆனாலும் வீடு கொழுத்துகிற மன்னனுக்கு நெருப்புக்கொள்ளி எடுத்துக்கொடுக்கிற மந்திரிகளைப்போல வாயை மூடிக்கொண்டு இருந்தும் எதுவும் பயனில்லை. வாயைத் திறந்து தட்டிக்கேட்டு உரக்கப் பேசியே ஆகவேண்டும். சனங்களோ, வியாபாரிகளோ, அரச அதிகாரிகளோ சுய பாதுகாப்பை எண்ணி பேசத்தயங்குவது என்பது மேலும் மேலும் உங்களுடைய பிள்ளைகளை நீங்கள் நடுத்தெருவில் விடுவதற்கு வழி வகுக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற…
The post பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
