இந்தியப் பெண்ணுடன் மகளுக்கு தொடர்பு – தந்தை பொலிஸில் முறைப்பாடு!
5 view
அக்கரைப்பற்றுவில் 33 வயதுடைய பெண்ணொருவருடன் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 வயதான இந்தியப் பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்றில் உள்ள 33 வயதுடைய இலங்கைப் பெண்ணின் வீட்டில் இந்தியப் பெண் பல நாட்களாக தங்கியிருந்த நிலையில், இரண்டு யுவதிகளினதும் அசாதாரண நடத்தையைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளின்போது இலங்கைப் பெண் தனது தோழியுடன் இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும் அனுமதிக்காவிட்டால் உயிரை மாய்ப்போம் என்று கூறியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த இலங்கைப் பெண் திருமணமானவர் என்பதுடன், ஒரு குழந்தையின் தாய் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைப் பெண்ணின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இரு பெண்களையும் கடந்த புதன்கிழமை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் பொலிஸார் முன்னிலைப்படுத்தினர். இதனையடுத்து, இரு பெண்களையும் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மனநல மருத்துவரிடம் அனுப்புமாறு கல்முனை நீதவான் எம்.எச்.எம்.ஹன்ஸா பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.…
The post இந்தியப் பெண்ணுடன் மகளுக்கு தொடர்பு – தந்தை பொலிஸில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியப் பெண்ணுடன் மகளுக்கு தொடர்பு – தந்தை பொலிஸில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
