283 ஏக்கர் காணிகளில் பயிர்ச்செய்கை! – அமைச்சர் தகவல்
5 view
மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 283 ஏக்கர் காணிகளில் இலங்கை காணிகள் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்கவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் வெற்று நிலங்களை அடையாளம் கண்டு அவற்றைப்பயன்படுத்தி விரைவாக பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன் ஒரு கட்டமாக இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை காணிகள் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள 188 ஏக்கர் நிலத்தில் விரைவாக பயிர் செய்கை ஆரம்பிக்கப்படவிருப்பதோடு ஏற்கனவே 94 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நெல் மற்றும் குறுகிய காலப் பயிர்களை இந்த நிலங்களில் பயிர் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பெப்பிலியான,பில்லேவ, நாவின்ன, கட்டுவாவல,போகுந்தர, கெஸ்பாவ, பிலியந்தல உட்பட்ட பகுதிகளிலுள்ள காணிகள் தெரிவுசெய்யப்பட்டு துரித கதியில் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க…
The post 283 ஏக்கர் காணிகளில் பயிர்ச்செய்கை! – அமைச்சர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 283 ஏக்கர் காணிகளில் பயிர்ச்செய்கை! – அமைச்சர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
