சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்
27 view
இந்திய சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்து இளைஞர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வரிடம் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ் நாட்டில் அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் பலரை விடுதலைப்புலிகள் என குற்றம் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தண்டனைக்காலம் முடிந்த பிறகும் விடுதலை செய்யப்படாமல் சிறையிலேயே வைத்திருப்பதைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஒரு இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். குற்றம் இழைத்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றங்கள் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டால் சிறைகளில் அடைக்கப்படுவதும், தண்டனைக்காலம் முடிந்த பிறகு விடுதலை செய்யப்படுவதும் சட்ட ரீதியாக நடைபெறுவதாகும். ஆனால், ஈழத் தமிழ் இளைஞர்கள் பொய்க் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படுவதும் சிறைகளுக்குப்பதில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு ஆண்டுக் கணக்கில் வாடுவதும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.…
The post சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
