பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
31 view
கொழும்பு, ஜுன் 27 வீடுகள் மற்றும் தனிப்பட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறு பொலிஸார் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருளுடன் தொடர்புடைய தீப்பரவல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக இவ்வாறு வீடுகள் உள்ளிட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதனை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான துண்டு சீட்டை இன்று முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் இணைந்து இந்த பணியினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எரிபொருளை விநியோகிக்கும் புதிய முறைமையின் அடிப்படையில், வாகன உரிமையாளர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. கிராம அலுவலர்கள், விவசாயம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக இவ்வாறு பதிவு செய்யப்படவுள்ளது. அதேநேரம், எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக…
The post பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
