கஹதுடுவ பகுதியிலுள்ள வீட்டில் இடம்பெற்ற தீ விபத்திற்கான காரணம் வெளியாகியது!

15 view
கஹதுடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கொள்கலனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகம்மன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (26) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். வீட்டின் அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, தாய் மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 47 வயதுடைய தந்தையும் 39 வயதுடைய தாயும் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதுடன், 19 வயதுடைய மூத்த மகள் ஆபத்தான காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 4 வயதுடைய இளைய மகள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவர்களது பாட்டி தீயில் காயமடையவில்லை, பின்னர் அக்கம்பக்கத்தினர் தீயை…
The post கஹதுடுவ பகுதியிலுள்ள வீட்டில் இடம்பெற்ற தீ விபத்திற்கான காரணம் வெளியாகியது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース