எரிபொருள் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்- வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு!
15 view
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான நிலையில் வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரசு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்தார். அதேவேளை இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாரதி காப்பாளர்கள் தாம் கடமைக்கு செல்வதற்குரிய எரிபொருளை புதிய தரப்பினர் தமக்கு பெற்றுத் தரவில்லை என நடத்திய ஊடக சந்திப்பை அடுத்து ஆளுநர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கரிசனையாக உள்ளதோடு அவர்களுக்கான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமது கடமைகளை காரணங்காட்டி எரிபொருளை பெற்றவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமென ஆளுநர் மேலும் தெரிவித்தார். பிற செய்திகள்
The post எரிபொருள் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்- வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்- வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
