நோயாளர்கள் – வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மட்டுப்படுத்தப்பட்டது!
15 view
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கடந்த 4 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு வகையான மரக்கறிகளுடன் மாத்திரமே உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் ரேணுகா லியனகே தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இது செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரியான செயலாகவே அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இது குறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், “தற்போது சுமார் 1,500 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு முன்னர் நல்ல போஷாக்கான உணவு வழங்கப்பட்டபோதிலும், தற்போது சோற்றுடன் இரண்டு கறிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அவற்றில், பூசணிக்காய், பருப்பு, உருளைக்கிழங்கு, மாங்காய் கறி, கரட் என ஏதாவது இரண்டு கறிகளுடன் மாத்திரமே சோறு வழங்கப்படுகிறது. ஒரு துண்டு மீன் அல்லது முட்டை தற்போ வழங்குவதில்லை. மேலும், நோயாளிகளுக்கு…
The post நோயாளர்கள் – வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மட்டுப்படுத்தப்பட்டது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நோயாளர்கள் – வைத்தியசாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மட்டுப்படுத்தப்பட்டது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
