வடமாகாணத்தில் பணியாற்றும் வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு? எழுந்தது சர்ச்சை
5 view
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், பல்வேறு நெருக்கடிகள் தற்போது நாட்டில் காணப்பட்டாலும் கூட அதை எதிர்கொண்டு வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகின்றனர். நாம் பல்வேறு கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு முன்வைத்த போதும் அதனைக் கருத்தில் கொள்ளாது வடமாகாணத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதுடன் முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. சம்பளம் வழங்கப்பட முன்னரே உரிய அதிகாரிகளுடன் எழுத்து மூலமாக நாம் கோரிக்கை விடுத்த போதும் உங்களது சம்பளம் குறைக்கப்படாது என்று அவர்களால் எமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. சம்பளம் வழங்கப்படாமல் விடுவது தொடர்பாகவோ சம்பளம் குறைப்பு தொடர்பாகவோ நிறுவனங்கள் முன்னரே அறிவிக்க வேண்டும் என்பது ஸ்தாபன விதி. ஆனால் எதுவும் பின்பற்றப்படாமல் இங்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.…
The post வடமாகாணத்தில் பணியாற்றும் வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு? எழுந்தது சர்ச்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாணத்தில் பணியாற்றும் வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு? எழுந்தது சர்ச்சை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
