பஸ்ஸில் தவறவிட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த யாழ்.பொலிஸார்
15 view
கொழும்பு, ஜுன் 23 யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பஸ்ஸில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வங்கியில் 96 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு பஸ்ஸில் மூதாட்டி ஒருவர் பயணித்துள்ளார். அவர் யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி தனது பையை பார்த்த வேளை அதனுள் இருந்த பணத்தினை காணவில்லை. அவ்வேளை அப்பகுதியில் வீதி கடமையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து பொலிஸாரிடம் அது தொடர்பில் முறையிட்டுள்ளார். அதனை அடுத்து அந்த மூதாட்டியின் அடையா அட்டையை வாங்கிக்கொண்டு, முச்சக்கர வண்டியில் தம்மை பின் தொடருமாறு அறிவுறுத்தி விட்டு பொலிஸார் பஸ்ஸை துரத்தி சென்று , கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகில் வழிமறித்து , மூதாட்டியின் பணம் காணாமல் போனமை தொடர்பில் தெரிவித்துள்ளனர். பின்னர் பஸ்ஸின் நடத்துனரின் உதவியுடன் , பஸ்ஸினை சோதனையிட்டனர். பணத்தினை காணாத நிலையில்…
The post பஸ்ஸில் தவறவிட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த யாழ்.பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பஸ்ஸில் தவறவிட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த யாழ்.பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
