கிளிநொச்சியில் அழுது புளம்பிய பெண் பதில் அதிபர் : வெளியான காரணம்!
14 view
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவர் தனது பிள்ளையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் விநியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலரால் அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசும் செயற்பாடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடமைக்கு செல்ல எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற குறித்த பெண் பதில் அதிபர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார். இவ்விடயம் குறித்து பதில் அதிபர் கருத்து தெரிவிக்கையில், ”கடமைக்கு செல்ல வந்த என்னை தரக்குறைவாக பேசுகின்றனர். கல்வி வேண்டாம், பெட்ரோலே வேண்டும் என்கின்றனர். ஆசிரியர்கள் என்றால் தரக்குறைவானவர்கள் இல்லை. உங்கள் பிள்ளைகளிற்கே கல்வியை புகட்டுகின்றோம். இவ்வாறு சென்றால் பிள்ளைகள் முதல் எழுத்து கூட அறியாதவர்களாக வளர்வார்கள். எங்களிற்கு முறையான எரிபொருள் கிடைக்க வேண்டும். இல்லையேல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது.…
The post கிளிநொச்சியில் அழுது புளம்பிய பெண் பதில் அதிபர் : வெளியான காரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் அழுது புளம்பிய பெண் பதில் அதிபர் : வெளியான காரணம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
