லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை!
38 view
லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளதன் பின்னணியில் அதை காரணம் காட்டி தற்போது ரஷ்ய பொருட்களை ரயில் பாதை வழியாக கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல லிதுவேனியா திடீரென தடை விதித்துள்ளது. இதனால் கட்டுமான பொருட்கள், நிலக்கரி உட்பட முக்கிய பொருட்களை கலினின்கிரேட்க்கு கொண்டு செல்ல முடியாத நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. லிதுவேனியாவின் இந்த முடிவை ரஷ்யா கடுமையாக எதிர்த்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பொருட்களை கொண்டு செல்ல லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அது லிதுவேனியா மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். கலினின்கிரேடு பகுதிக்கும் ரஷ்யாவுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கான தடை நீடித்தால், லிதுவேனியா மீது நடவடிக்கை எடுக்க ரஷ்யா…
The post லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லிதுவேனியா விதித்துள்ள தடையை உடனடியாக மீள பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
