நாட்டில் ஊழலற்ற நிர்வாகம் ஒன்றை கட்டியெழுப்ப எவர் முயன்றாலும் அதனை நான் ஆதரிப்பேன் – அங்கஜன் இராமநாதன்
14 view
நாட்டில் ஊழலற்ற நிர்வாகம் ஒன்றை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றில் துணை நிற்பபேன். என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். இன்று தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இருவேறு வாக்கெடுப்புக்களில் வாக்களித்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சார திருத்த சட்டமூலம் இன்று திருத்தங்கள் இன்றி நிறைவேறியுள்ள நிலையில், இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கியத்துவமான திருத்த முன்மொழிவொன்றை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சபையில் முன்வைத்திருந்தார். அதாவது, சட்ட மூலத்தின் 4வது சரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை தனியாருக்கு வழங்கும்போது 10MW க்கு மேற்பட்ட திட்டங்களுக்கு வெளிப்படைத்தன்மையுடைய கேள்வி கோரல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனும் திருத்த முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார். இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக 54 வாக்குகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த திருத்த முன்மொழிவுக்கு நானும் ஆதரவாகவே வாக்களித்தேன்.தனியார் நிறுவனங்களுக்கு பாரிய திட்டங்களை கையளுக்கும்போது திறந்த கேள்விகோரல்கள் கடைப்பிடிக்கப்படுவதானது…
The post நாட்டில் ஊழலற்ற நிர்வாகம் ஒன்றை கட்டியெழுப்ப எவர் முயன்றாலும் அதனை நான் ஆதரிப்பேன் – அங்கஜன் இராமநாதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் ஊழலற்ற நிர்வாகம் ஒன்றை கட்டியெழுப்ப எவர் முயன்றாலும் அதனை நான் ஆதரிப்பேன் – அங்கஜன் இராமநாதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
