புதிய அரசியல் திருத்தம் ஊடாக பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும் – சுரேஸ்
26 view
புதிய அரசியல் திருத்தம் ஊடாக நாடாளுமன்றம் மாகாணசபை, உள்ளூராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும். இதுவே நாட்டினை பொருளாதார ரீதியிலும் ஐனநாயக ரீதியிலும் முன்னேற்ற பயன்படுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”தற்போது 21 வது திருத்தம் தொடர்பில் பேசப்படுகின்றது இந்த 21வது திருத்தம் என்பது 19ஆம் திருத்தத்தின் ஒத்த ஒன்றே. ஆனால் அதனை முழுமையாக 19ஆம் திருத்தத்தின் வடிவம் எனக் கூறமுடியாது. 19வது திருத்தத்தில் உள்ள பல விடயங்கள் 21வது திருத்தத்தில் இல்லை. 19ம் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதன் ஊடாக மீளவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை கொடுக்க முடியும் என்பது மாத்திரமல்ல பல விடயங்களை நடைமுறைப்படுத்தலாம். நாடு பொருளாதார ரீதியாக பலமடைய வேண்டுமாக இருந்தால் மாகாணங்கள் விருத்தி அடைய வேண்டும். மாகாணசபை…
The post புதிய அரசியல் திருத்தம் ஊடாக பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும் – சுரேஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய அரசியல் திருத்தம் ஊடாக பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும் – சுரேஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
