இளைஞர்களின் கனவை கலைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு – சாணக்கியன் கேள்வி
15 view
மாதாந்தம் 50 ஆயிரம் சம்பளம் பெறும் பட்டதாரி இளைஞர்களின் வீடு கட்டும் கனவை கலைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் 30 வருட யுத்தம் காரணமாக வீடுகளை இழந்து, வீடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டு, அழிக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசம். அந்த வகையிலேயே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாரிய வீடமைப்பு வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் அந்த வீடுகள் இதுவரை முடித்துக்கொடுக்கப்படாமல் உள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வடக்கு கிழக்கில், நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்’ எனக்…
The post இளைஞர்களின் கனவை கலைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு – சாணக்கியன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளைஞர்களின் கனவை கலைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு – சாணக்கியன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
