தொலைபேசி, இணைய சேவைக் கட்டணங்களும் அதிகரிப்பு
15 view
இலங்கையில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 12%ஆக நேற்று முன்தினம் முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15%ஆகவும் அதிகரிக்கப்படுமென மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. என்ற போதும் குறித்த கட்டண அதிகரிப்புக்கான விபரங்கள் தொடர்பிலான அறிவிப்புக்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. பிற செய்திகள்
The post தொலைபேசி, இணைய சேவைக் கட்டணங்களும் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொலைபேசி, இணைய சேவைக் கட்டணங்களும் அதிகரிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
