‘‘கேகே’’ : காந்தக் குரலை கொண்டாட மறந்ததேனோ?
5 view
‘கே கே’ என்ற பெயரை இன்றுதான் நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் அவரின் பாடல்களின் பட்டியல்களைக் தேடினால் நாம் ரசித்த பல பாடல்களுக்குச் சொந்தக் குரலோன். ரஹ்மான், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா, ஜிவி பிரகாஷ் என அனைவர் இசையமைப்பிலும் 90 களின் பிற்பகுதி தொடங்கி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கோலோச்சியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவின் ‘அண்ணாமலை’ மெகா சீரியல் வந்தபோது அதன் தொடக்கப்பாடலாக ஒலித்த ‘உயிர்கள் பிறப்பது பாசத்துக்காக’ என்ற பாடலைக் கேட்டு மயங்கி தேடியபோது அது கேகே பாடிய பாடல். விரவிக் கிடக்கும் சோக வெம்மையை அங்குலம் அங்குலமாக நீவி துடைத்டெடுக்கும் ஈரக்குரல் கேகேவுடையது. தேக்கி வைத்திருக்கும் அத்தனை சோகங்களையும் நிறுத்த இயலாமல் உடைத்து அழ செய்த ஒரு குரல். இன்று அந்த காதல் காந்தக் குரல் காற்றோடு கலந்துவிட்டது. ‘உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று…
The post ‘‘கேகே’’ : காந்தக் குரலை கொண்டாட மறந்ததேனோ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ‘‘கேகே’’ : காந்தக் குரலை கொண்டாட மறந்ததேனோ? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
