மின்சார சபையை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

26 view
கொழும்பு,ஜுன் 01 இலங்கை மின்சார சபைக்கு பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்றக் (கோப்) குழுவில் முன்னிலையாகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் இலங்கை மின்சார சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினை எதிர்வரும் 7 ஆம் திகதி பொது நிர்வாகங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 8 ஆம் திகதி முன்னிலையாகுமாறு மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விவசாய அமைச்சு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம், மீன்பிடி அமைச்சு ஆகியவற்றினை அரசாங்க நிதி பற்றிய குழுவில் அடுத்த வாரம் முன்னிலையாகுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
The post மின்சார சபையை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース