07 பிள்ளைகளின் தந்தையை காவு வாங்கிய முதலை

13 view
நிந்தவூர் பிரதேசத்தில் புல் வெட்டுவதற்காக சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் கடந்த திங்கட்கிழமை(30) காலை தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 55 வயதுடைய நிந்தவூர் 09 ஆம் பிரிவைச் சேர்ந்த அப்துல் மஜீட் ஹூசைன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் . உயிரிழந்தவரின் சடலம் மறுநாளான செவ்வாய்க்கிழமை(31) காலை முதலை தாக்குதலுக்குள்ளான நிலையில் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தது. மேலும் தெரியவருகையில், 07 பிள்ளைகளின் தந்தையாகிய இவர் ஒரு இசைக் கலைஞனாவார். இவர் மிருதங்கம் வாசிப்பதில் சிறந்து விளங்கியதுடன் மக்களினால் டோல் மாஸ்டர் என அழைக்கப்பட்டார். கடந்த வருடம் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. சம்பவ தினமன்று காலை தனது வளர்ப்பு மாட்டுகளுக்கு புல் வெட்டிக் கொண்டிருந்த களியோடை ஆற்றின் வடக்குப் புறத்தில் இவரது…
The post 07 பிள்ளைகளின் தந்தையை காவு வாங்கிய முதலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース