சிட்டை மூலம் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் முறை வெற்றியளித்துள்ளது!
5 view
கொட்டகலை – அட்டன் நகரங்களில் சிட்டைகளின் மூலம் சமையல் எரிவாயுவை பயனாளிகளுக்கு விநியோகிக்கும் முறை வெற்றியளித்துள்ளதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர். கொட்டலை வர்த்தக சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் என்ற முறையினால், முகவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சிலிண்டர்களின் அளவுக்கு சிட்டைகளைப் பெற்றவர்கள் மாத்திரம் இன்று (01) சிலிண்டர்களைப் பெற்றுக்கொண்டனர். இதனால் நீண்ட வரிசைகள் தவிர்க்கப்பட்டிருந்ததோடு இலக்கங்களின் படி சிட்டை கொண்டிருந்தோர் மாத்திரம் அவற்றைப் பெற்றனர். இதேவேளை அட்டன் டிக்கோய நகரசபை எல்லைக்குள் வசிக்கும் குடும்பங்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சிட்டை வழங்கும் முறையில், இலக்கங்களின் படி தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் பெற்றவர்கள் மாத்திரம் சிலிண்டர்களைப் பெற்று சென்றனர். நகரங்களில் உள்ள குறித்த முகவர்களுக்கு எத்தனை சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன என்ற விபரத்தை பிரதேச செயலகம் பெறுகின்றது. பின்னர் தாம் விநியோகித்த சிட்டைகளில் உள்ள இலக்கங்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு அழைப்பெடுத்து அவர்கள் தெரிவு செய்த முகவரிடம் சென்று சிலிண்டர்களைப் பெறுமாறு கூறுகின்றனர்.…
The post சிட்டை மூலம் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் முறை வெற்றியளித்துள்ளது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிட்டை மூலம் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் முறை வெற்றியளித்துள்ளது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
