சீரற்ற காலநிலை மாற்றத்தால் பறிபோன உயிர்! முழுமையான தகவல்
15 view
இரத்தினபுரி பகுதியில் அனர்த்த நிலைமைகளை ஆராய சென்ற அதிகாரியொருவர் வெள்ளத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். கிரியெள்ள அனர்த்த நிவாரண அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. குறித்த அதிகாரி கடமைகளை முடித்து வீடு திரும்பிய நிலையில், இந்த அனர்த்ததில் சிக்குண்டுள்ளார். தமது வீட்டுக்கு அருகில் ஏற்ப்பட்ட வெள்ளத்தில் சிக்கியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 6 மாவட்டங்களில், சேர்ந்த இரண்டாயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 12 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 57 குடும்பங்களை சேர்ந்த 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க்பட்டுள்ளனர். அத்துடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் பாதிக்க்பட்டுள்ளதாக அனர்த்த முகதமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 448 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 66 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.…
The post சீரற்ற காலநிலை மாற்றத்தால் பறிபோன உயிர்! முழுமையான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சீரற்ற காலநிலை மாற்றத்தால் பறிபோன உயிர்! முழுமையான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
