மத்திய வங்கி ஆளுநர் முன்வைத்துள்ள கோரிக்கை!
15 view
நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு, கட்சி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கி, நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது மத்திய வங்கி ஆளுநர் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதற்கு முன்னர் எரிபொருளுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டமையால், அதனை செயற்படுத்த முடியாமல் போன நிலையில், இன்று அதனை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் மற்றும் அதற்கான பயணத் திட்டம் தொடர்பில் முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா…
The post மத்திய வங்கி ஆளுநர் முன்வைத்துள்ள கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மத்திய வங்கி ஆளுநர் முன்வைத்துள்ள கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
