அரசியல் சாசன சீர்திருத்தம்! – தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்! – ஸ்ரீகாந்தா
17 view
அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் பாரிய அரசியல் முக்கியத்துத்தைப் பெறுகின்ற நிலையில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ் விடயம் தொடர்பில் விரைவில் கலந்துரையாட முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், முன்னெப்பொழுதும் இருந்திராத மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளும், பிரதான சிங்கள அரசியல் அணிகளுக்கு இடையில் அதிகாரப் போட்டிகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உட்கட்சிப் பூசல்களும் மேலெழுந்து நிற்கின்றன. ஆயினும், 20வது அரசியல் சாசன திருத்தத்தின் ஊடாக இல்லாது ஒழிக்கப்பட்ட 19வது திருத்தத்திற்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்காக, 21வது திருத்தம் என்பது, பரந்துபட்ட அரசியற் கருத்தொற்றுமையுடன் முன்மொழியப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி முழுமையான பாராளுமன்ற ஆட்சி முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதிலும் கருத்தொற்றுமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தின் முன் உள்ள…
The post அரசியல் சாசன சீர்திருத்தம்! – தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்! – ஸ்ரீகாந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் சாசன சீர்திருத்தம்! – தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்! – ஸ்ரீகாந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
