வீடுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் வலியை 39 வருடங்களுக்கு முன்பே நாம் உணர்ந்துள்ளோம்! – திகாம்பரம்
15 view
நாட்டில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்துக்கு பின்னரே பாதிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அதன் வலி தெரிகின்றது. ஆனால் 39 வருடங்களுக்கு முன்னரே இந்த வலி எங்களுக்கு தெரியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ப.திகாம்பரம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நான்காவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இடம்பெற்ற அசம்பாவிதத்தில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. அதன் வேதனையை அவர்கள் இப்போதுதான் உணர்கின்றனர். ஆனால் வீடுகள் எரிக்கப்படுவதன் வேதனையின் வலி 39வருடங்களுக்கு முன்பே எங்களுக்கு தெரிகின்றது. 1983 ஜூலை கலவரத்தை நாங்கள் நேரடியாகவே பார்த்தோம். அப்போது தமிழ் மக்களின் வீடுகள். கடைகள் எரிக்கப்பட்டன. அவர்களின் சொத்துக்களை இல்லாமலாக்கி கொன்று குவித்தார்கள். அதற்காக இந்த சம்பவத்தை…
The post வீடுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் வலியை 39 வருடங்களுக்கு முன்பே நாம் உணர்ந்துள்ளோம்! – திகாம்பரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீடுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் வலியை 39 வருடங்களுக்கு முன்பே நாம் உணர்ந்துள்ளோம்! – திகாம்பரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
