இலங்கையின் தேசிய மலர் ‘நீல அல்லி’ அல்ல! – மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கோரிக்கை!
50 view
‘அல்லி மலர்’ இலங்கையின் தேசிய மலர் என்பதை தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய உரிய நிறுவனங்களைப் போன்று செய்தித்தாள் விளம்பரங்கள் ஊடாகவும், பொதுமக்களை உரிய முறையில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோபா எனப்படும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு சுற்றாடல் அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளில் தேசிய மலர் தொடர்பில் பாடசாலை, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை விழிப்புணர்வூட்டினாலும் அது போதியளவு இடம்பெறவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் 2015 ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய தேசிய மலர் ‘அல்லி மலர்’ என அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை விழிப்புணர்வூட்டுவதற்குப் போதியளவு பிரசாரத்தை வழங்குவதற்கு அமைச்சு தவறியுள்ளதாக கோபா குழு அறிவித்துள்ளது. இதனால் தேசிய மலர் ‘நீல அல்லி’ என இன்னும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குழு கண்டறிந்துள்ளது.…
The post இலங்கையின் தேசிய மலர் ‘நீல அல்லி’ அல்ல! – மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் தேசிய மலர் ‘நீல அல்லி’ அல்ல! – மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
