ஐ.பி.எல்.: சென்னை அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி!
4 view
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 68ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொயின் அலி 93 ஓட்டங்களையும் டோனி 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஒபெட் மெக்கோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் போல்ட் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 19.4…
The post ஐ.பி.எல்.: சென்னை அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.பி.எல்.: சென்னை அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
