கொழும்பில் “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் இருந்து கிளம்பிய குடும்பஸ்த்தர்

17 view
கோட்டா கோ ம ஆர்ப்பாட்ட களத்தை நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை குடும்பஸ்தர் ஒருவர் இன்று ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பத்தரே இவ்வாறு பயணத்தை ஆரம்பித்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 4 நாட்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்து சென்றடைய உள்ளதாகவும் தெரிவிக்கும் அவருக்கு மக்கள் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். Previous articleயாழில் கடும் காற்றினால் ஒருவர் உயிரிழப்பு 10 பேர் பாதிப்பு!
The post கொழும்பில் “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் இருந்து கிளம்பிய குடும்பஸ்த்தர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース