சனிக்கிழமை மின்வெட்டு தொடர்பான கால அட்டவணை
14 view
கொழும்பு,மே 20 சனிக்கிழமை (21) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது. மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
The post சனிக்கிழமை மின்வெட்டு தொடர்பான கால அட்டவணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சனிக்கிழமை மின்வெட்டு தொடர்பான கால அட்டவணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
