பெண்களின் திருமண வயதை உயர்த்த எதிர்ப்பு
8 view
இந்தியா,மே 20 பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவுக்கு இந்திய குழந்தைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் நோக்கில் குழந்தைத் திருமண மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில்,பாஜக எம்.பி வினய் சஹஸ்ரபுத்தேதலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டு ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களும் அமைப்புகளும் மசோதா குறித்த தங்கள் கருத்துக்களை நிலைக்குழுவிடம் தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பின்பேரில், பல்வேறு அமைப்புகள் தங்கள் கருத்துக்களை நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளன. இந்த கருத்துக்களைப் பரிசீலிக்கும் நாடாளுமன்ற நிலைக்குழு, மசோதா குறித்த தனது அறிக்கையை அடுத்த மாதம் நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்க உள்ளது. இந்நிலையில், நோபல் பரிசுபெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் அமைப்பு உள்ளிட்ட சுமார் 70…
The post பெண்களின் திருமண வயதை உயர்த்த எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்களின் திருமண வயதை உயர்த்த எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
