டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன்
14 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்துவருவதன் காரணமாக எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமெனமும் அனைவருமாக ஒன்றினைந்து இந்த டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டுமென வும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் பாடசாலைகளில் நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றினை துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பாடசாலைகளில் இன்று விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பாடசாலைகள் சோதனையிடப்பட்டதுடன் நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்த பாடசாலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டதுடன் உடனடியாக துப்புரவு செய்யும் பணிப்புரைகளும் விடுக்கப்பட்டன. மண்முனை வடக்கு சுகாதார…
The post டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டும் – கு.சுகுணன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
