ஜனாதிபதியின் முன் அமைச்சராக பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது- ஹரீன் ஆதங்கம்!
5 view
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன் அமைச்சராக நான் இன்று பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது. அவரின் முகம் பார்க்கவில்லை. அதனால்தான் படம்கூட எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக அவர் முன்னிலையில் அமைச்சராகப் பதவியேற்றேன்.” இவ்வாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரீன் பெர்னாண்டோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று காலை அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், ஊடக சந்திப்பை நடத்தினார். அவருடன் அமைச்சுப் பதவியைப் பெற்ற மனுஷ நாணயக்காரவும் இதில் பங்கேற்றிருந்தார். இதன்போது அமைச்சர் ஹரீன் தெரிவித்ததாவது:- ‘கோ ஹோம் கோட்டா’ என்ற எனது நிலைப்பாட்டில் எள்ளளவேனும் மாற்றம் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தூய்மையான அரசியல் தலைவர். அவரைக் குறைகூற விரும்பவில்லை. ஆனாலும், சவாலை ஏற்க அவர் முன்வரவில்லை. கட்சிக்காகவே நான் அமைச்சுப் பதவியை ஏற்றேன். கட்சியுடனேயே தொடர்ந்தும் பயணிக்க எதிர்பார்க்கின்றேன். சவாலை…
The post ஜனாதிபதியின் முன் அமைச்சராக பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது- ஹரீன் ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதியின் முன் அமைச்சராக பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது- ஹரீன் ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
