கனேடிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து இலங்கை வருத்தம்

4 view
கொழும்பு, மே 20 இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் தமிழர் இனப்படுகொலை குறித்த பிரேரணை கனேடிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்தமை குறித்து இலங்கை அரசாங்கம் வருத்தம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாகக் கண்டறியப்படவில்லை என்ற கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக, இலங்கை தொடர்பான நாடாளுமன்றப் பிரேரணையில் உள்ள இனப்படுகொலை பற்றிய அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்த அதே வேளையில், மோதலின் இறுதிக்கட்டத்தின் போது முன்னாள் மோதல் வலயங்களில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கையின் உண்மையான நிலைமை குறித்து கனேடிய அரசாங்கத்திற்கு உயர் மட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டமை நினைவுகூரத்தக்கது. இன்று, மோதல் முடிவடைந்து 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை தனது நல்லிணக்கச் செயற்பாட்டில்…
The post கனேடிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து இலங்கை வருத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース