சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கான அறிவித்தல்!

15 view
பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை தினமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை கடமைகளுக்குரிய பணிக்குழாமினர், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு கடமைகளுக்கு சமுகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், பரீட்சை மண்டபமாக பயன்படுத்தப்பட உள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களும், இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமுகமளித்து மண்டபங்களை ஒழுங்கமைக்கும் பணிக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன அறியப்படுத்தியுள்ளார். பரீட்சை மேற்பார்வையாளர்களினதும், அதிபர்களினதும் சிபாரிசுக்கு அமைய பரீட்சை நிலைய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நோக்குநர்களாக பெயரிடப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் மேற்பார்வையாளர்களின் அழைப்புக்கு அமைய, உரிய பணிக்கு சமுகமளித்தல் வேண்டும். எரிபொருள் சிக்கனத்தை கருத்திற்கொண்டுஇ நோக்குநர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டத்தை இம்முறை இணையவழி காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறியப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வேறு ஏதேனும் அத்தியாவசிய விடயங்கள் இருப்பின் திங்கட்கிழமை பரீட்சை தொடங்குவதற்கு முன்னர் அவற்றை அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்…
The post சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கான அறிவித்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース