அமைச்சு பதவி தொடர்பில் விக்னேஸ்வரன் எம்.பியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது! ஸ்ரீகாந்தா
5 view
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோமெனவும் அதன் பங்காளி கட்சியான தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே என்.ஸ்ரீகாந்தா இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடக சந்திப்பொன்றில் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றினால் அமைச்சரவையில் இணைவது தொடர்பில் பரிசீலிக்க முடியும். தமிழ் தேசியத்தை வலியுறுத்துகின்ற தரப்புக்கள் சிங்கள-பௌத்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் இருப்பது என்பது நீண்ட காலமாக நிலவி வந்த ஒன்றாகும். அதற்கு விதிவிலக்காக செயற்பட்டவர்கள் தங்கள் சொந்த தொகுதியில் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததும் வரலாறு. விக்னேஸ்வரன் குறிப்பிட்ட மூன்று நிபந்தனைகளை பொறுத்தவரை அது நியாயமானது. ஆனால் அதனை நிறைவேற்றினால் அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் பரிசீலிக்கலாம்…
The post அமைச்சு பதவி தொடர்பில் விக்னேஸ்வரன் எம்.பியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது! ஸ்ரீகாந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சு பதவி தொடர்பில் விக்னேஸ்வரன் எம்.பியின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது! ஸ்ரீகாந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
