விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் தனது கருத்தை மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன்: ஸ்ரீகாந்தா
5 view
யாழ்ப்பாணம்,மே 19 தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், அமைச்சு பதவி தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறோமெனவும் அதன் பங்காளி கட்சியான தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே என்.ஸ்ரீகாந்தா இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடக சந்திப்பொன்றில் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றினால் அமைச்சரவையில் இணைவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என கருத்து தெரிவித்திருந்தார். தமிழ் தேசியத்தை வலியுறுத்துகின்ற தரப்புக்கள் சிங்கள-பௌத்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் இருப்பது என்பது நீண்ட காலமாக நிலவி வந்த ஒன்றாகும். அதற்கு விதிவிலக்காக செயற்பட்டவர்கள் தங்கள் சொந்த தொகுதியில் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததும் வரலாறு. விக்னேஸ்வரன் குறிப்பிட்ட மூன்று நிபந்தனைகளை பொறுத்தவரை அது நியாயமானது. ஆனால் அதனை…
The post விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் தனது கருத்தை மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன்: ஸ்ரீகாந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் தனது கருத்தை மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன்: ஸ்ரீகாந்தா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
